இந்தியா ஸ்பெஷல் வாட்ஸ்அப்!?
இந்தியாவில் முன்னிலை வகிக்கும் வாட்ஸ்அப் விரைவில் கேஷ்லெஸ் எகானமி எனப்படும் பணமில்லா பரிவர்த்தனை செய்யும் சேவையை, தனது அப்ளிகேஷனில் அறிமுகப்படுத்தப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என இந்தியப் பிரதமர் மோடி அறிவித்தார். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இந்தியாவில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எனத் தொடக்கத்தில் சொல்லப்பட்டது. ஆனால் அதன்பின் பணமில்லா பரிவர்த்தனை முன்னிலைப் படுத்தப்பட்டது. அதன்பின், பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ள Bhim (Bharat Interface for Money) என்ற செயலியும் இந்திய அரசின் சார்பாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் சோஷியல் மீடியா நிறுவனமான வாட்ஸ்அப் விரைவில் இந்த சேவையில் களமிறங்கப் போவதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் ஒருநாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்த வாட்ஸ்அப் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான பிரையன் ஆக்டன், மத்திய தகவல் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை சந்தித்துப் பேசினார்.… Read More