X

Vinayagar

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

வணக்கம்! இன்று விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். நமது இந்து சமயத்தில் முழு முதல் கடவுளாக கருதப்படுகிறது. விநாயகருக்கு, முக்கியமாக அருகம்புல் கொண்டே அர்ச்சனை செய்வார்கள். விநாயக சதுர்த்தி அன்று பயன்படுத்தும் இலைகள் (பத்திரங்கள்) மட்டுமே 21 இருக்கின்றன. பிள்ளையார் சதுர்த்தி அன்று 21 இலைகளைப் போட்டு பூஜை செய்வது விசேஷம் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த 21 இலைகளையும் நமது முன்னோர்கள் தெரிந்து வைத்திருந்தனர்:– இதோ 21 இலைகள் (பத்ரம்): மாசீ பத்ரம், ப்ருஹதி பத்ரம், வில்வ பத்ரம், தூர்வாயுக்ம (அருகம்புல்) பத்ரம், துத்தூர பத்ரம், பதரீ பத்ரம், அபாமார்க பத்ரம், துளசி பத்ரம் சூத (மாவிலை) பத்ரம், கரவீர பத்ரம், விஷ்ணுகிராந்தி பத்ரம், தாடிமீ (மாதுளை) பத்ரம், தேவதாரு பத்ரம், மருவ பத்ரம், சிந்துவார பத்ரம், ஜாஜீ பத்ரம், கண்டகீ பத்ரம், சமீ (வன்னி) பத்ரம், அஸ்வபத்ரம், அர்ஜுன பத்ரம், அர்க (எருக்கு) பத்ரம். விநாயகர் மந்திரங்கள் வாக்குண்டாம் நல்ல… Read More

விநாயகர் மந்திரம்

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேன். கஜாநநம் பூதகணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம் உமா ஸூதம் சோக விநாச காரணம் நமாமி விக்நேச்வர பாத பங்கஜம். எடுத்த காரியங்கள் யாவினும் தடையின்றி வெற்றி பெற சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர் புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே மூல மந்திரம் *ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே* *வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா* இருபத்தெட்டு அட்சரங்களை உடைய இம்மந்திரம் பலவிதமான சக்திகளையும், சித்திகளையும் அளிக்கவல்லது.செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், குண்டலி வின்யாசம் முதலிய அனேக சித்திகள் இம்மந்திர ஜபத்தால் கைகூடும். வல்லப கணபதி மூல… Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.