மந்திரம் மகிமை
இந்து மதத்தின் அடிப்படை வேதங்கள்தான். வேத மந்திரங்களின் சாரம் உபநிஷதங்கள். பிற்காலத்தில் இந்த புண்ணிய பூமியில் தோன்றிய எண்ணற்ற மகான்கள் நம்முடைய நல்வாழ்க்கைக்காக பல மந்திர சக்தி கொண்ட ஸ்லோகங்களை அருளி இருக்கின்றனர். இந்த மந்திரங்களை உச்சரிப்பு மாறாமல் ஜபிக்கவோ அல்லது பாராயணம் செய்யவோ வேண்டும். உச்சரிப்பு சிறிது பிசகினாலும், மந்திரங்களின் அர்த்தம் மாறி விபரிதமான பலன்களைத் தந்துவிடும். அதனால்தான், மந்திரங்களை தகுந்த குரு மூலமாக உபதேசம் பெற்று, உச்சரிப்பு மாறாமல் ஜபிக்கவேண்டும். அப்போதுதான் அந்த மந்திரத்துக்கு உரிய பலனை நாம் பெற முடியும். இந்த தத்துவத்தை விளக்கும் வகையில் பகவான் ரமண மகரிஷி அருளிய ஒரு கதையை இங்கே பார்ப்போம். ஒரு அரசன் மாலை வேளையில் தனது மந்திரியைச் சந்திக்க விரும்பினான். மந்திரியின் வீட்டுக்குச் சொல்லி அனுப்பினான். காவலர்கள் சென்று அழைத்தும் மந்திரியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. காரணத்தைத் தெரிந்துகொள்ள நினைத்த அரசன், மந்திரியின் வீட்டுக்கே போனபோது, மந்திரி… Read More