கூகுளின் ‘தேஜ்’
நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு அனைவருக்கும் உடனடியாக வங்கி கணக்கில் இருந்து பணம் அனுப்ப, இந்திய தேசிய கொடுப்பனவுகள் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் யூபிஐ சேவையில் இணைந்து 2017 செப்டம்பர் 18 முதல் கூகுள் புதிதாகத் துவங்கியுள்ள சேவையே 'தேஜ்' ஆகும். கூகுள் தேஜ் செயலியில் தற்போது உள்ள அம்சங்கள், யூபிஐ உதவியுடன் வங்கி கணக்கை தேஜ் செயலியில் இணைப்பதன் மூலம் உடனடியாக, நேரடியாக வங்கி கணக்கிற்குப் பணம் அனுப்பலாம். இதற்கு அவர்களது வங்கி கணக்கில் யூபிஐ சேவை இருக்க வேண்டும், அவர்களின் யூபிஐ ஐடி உங்களிடம் இருக்க வேண்டும். தேஜ் செயலி கூகுள் நிறுவனத்தில் நேரடி 24 மணி நேர கண்காணிப்பில் இருக்கும். இதனால் மோசடிகள், ஹேக்கிங் போன்றவற்றைச் செய்ய முடியாது. யூபிஐ பின் மட்டும் இல்லாமல் கூகுள் பின் அல்லது கைவிரல்ரேகை அளித்தால் மட்டுமே பணம் பரிமாற்றம் செய்ய முடியும். இந்தியாவில் ஏதேனும் வங்கிகளில் கணக்கு, இந்திய மொபைல் எண் உள்ளிட்டவை தேவை… Read More