ஆலய தரிசனம்
வணக்கம்!! நாம் அனைவரும் ஆலயங்களுக்கு சென்று வருவோம், இன்று நம் முன்னோர்கள் ஆலய தரிசன முறைகள் மற்றும் விதிகள் என்ன என்பதை நான் இணையத்தில் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ”கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்”. ”ஆலயம் தொழுவது சாலவும் நன்றே” என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதியே கூறியவை. கடவுளை வழிபடும்போது, நமது மனம் தூய்மை அடைகின்றது. நம் மனதில் உறைந்திருக்கும் தீய எண்ணங்கள் மறைந்து, நல்லெண்ணம் வளர்கிறது. ஆலயத்துக்கு செல்லும் போது நீராடி, தூய ஆடை அணிந்து செல்ல வேண்டும். ஆலய கோபுரத்தை கண்டதும் கை கூப்பி வணங்க வேண்டும். அப்படி செய்வதால் தெய்வத்தின் காலடியை தொட்டு கும்பிடுவதாக நம்பிக்கை. கோபுர தரிசனம் பாவ விமோசனம் என்று சொல்லப்படுகிறது. அத்துடன் கோயில் திசை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் சூட்சுமத்தினையும் ஏற்படுத்தித் தந்துள்ளார்கள்.… Read More