X

technology

இன்றய தொழில்நுட்ப செய்திகள்

பேஸ்புக் தனது புதிய F8 டெவலப்பர் மாநாட்டில் பயனர்கள் தனியுரிமை சமூகத்தின் பல்வேறு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது, அதை கட்டுப்படுத்த புதிய “Clear History” தனியுரிமை கருவி (Privacy tool) விரைவில் பயனர்களுக்கு கிடைக்கச் செய்யும் என்று பேஸ்புக் அறிவிக்கிறது. புத்தம் புதிய டொமைன் பெயரிடும் சேவை (DNS) Cloudflare இணைய பயனர்களிடையே உறுதியான தரத்தை பெற்றுள்ளது. பல டிஎன்எஸ் வழங்குநர்களைப் போலன்றி, கிளவுட் ஃப்ளேர் கண்டிப்பாக தனியுரிமை சார்ந்த சேவையாக நிலைநிறுத்துகிறது. CUJO AI தரவுப்படி, ஏப்ரல் 1 ம் தேதி முதல் துவங்கியதிலிருந்து இது மொத்த DNS சந்தையில் கிட்டத்தட்ட 4% பெற்றுள்ளது, இப்போது ஐந்தாவது மிகவும் பிரபலமான DNS வழங்குநராக உள்ளது. விண்டோஸ் தொழில்நுட்ப வல்லுநர்கள் மிகவும் பயனுள்ள ஏப்ரல் 18 ஆம் தேதி, "விண்டோஸ் கட்டளை குறிப்பு" என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட 948 பக்கம் PDF. நீங்கள் Windows Command Reference PDF ஐ இங்கு… Read More

தொழில்நுட்ப செய்திகள்

வணக்கம்! இன்றைய நவீன தொழில்நுட்ப புரட்சி நமது வாழ்நாட்களை மாற்றியுள்ளது. தினசரி பல தொழில்நுட்ப பொருட்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. எனவே, சிறந்த முறையில் அதை பயன்படுத்த நாம் நமது அறிவை புதுப்பித்து வைத்திருப்பது அவசியம். Google Arts and Culture app's selfie feature now available in India Google team said; Less than 10% of Gmail users enable two-factor authentication Reliance Jio launches web version of JioTV app Microsoft Surface Book 2 coming to India and 16 other markets soon Google, Coursera team up to offer new programme for entry-level IT jobs Google may sell audiobooks on Play Store Olacabs may introduce Ola Play as standalone head unit for OEMs, consumers in… Read More

யூட்யூபின் அதிரடி!

தற்போது காணொளிகளுக்குக் கிடைக்கும் அபிரிமிதமான வரவேற்பை கருத்தில் கொண்டு கூகுள் YouTube Go என்ற புதிய செயலியை தற்போது இந்தியாக்கு (மட்டும்) அறிமுகப்படுத்தியுள்ளது. தற்சமயம் சோதனை (Beta) பதிப்பில் உள்ளது. இதுவும் வழக்கமான YouTube செயலி (App) போன்றதே ஆனால், தரவிறக்கம் செய்து Offline ல் பார்ப்பவர்களுக்கு எளிதானது, வசதியானது. இலவசமாக இணைப்பு கிடைக்கும் போது நமக்கு விருப்பமான காணொளிகளை இந்தச் செயலியின் மூலம் தரவிறக்கம் செய்து கொண்டு பின்னர் நமக்கு நேரம் இருக்கும் போது பார்க்கலாம். குழப்பமில்லாத எளிமையான முறை. இந்த பீட்டா வெர்சனை பரிசோதனை முயற்சியாக யூடியூப் தற்போது வெளியிட்டுள்ளது. டெஸ்ட்டர்களின் கருத்துகளைத் தெரிந்து கொண்டு, அதன் பின்னர் யூடியூப் தனது அப்ளிகேஷனில் படிப்படியாக மாற்றங்களைக் கொண்டுவரும். முதல் முறையாக இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தும் போது கூகுள் அக்கவுன்ட் மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களை அளித்த பின்னரே லாகின் செய்ய முடிகிறது.Read More Read More

அறிவியல் துணுக்குகள்

செயற்கை சூரியன் சூரியனை விட 10,000 மடங்கு அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் செயற்கை சூரியனை ஜெர்மனி விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். உலகின் மிகப்பெரிய செயற்கை சூரியனை, உயர் சக்தி வாய்ந்த விளக்குகள் மூலம் உருவாக்கியுள்ளனர் ஜெர்மனி விஞ்ஞானிகள். இதற்காக 149 சக்தி வாய்ந்த செனான் ஆர்க் மின்விளக்குகளைப் பயன்படுத்தி உள்ளனர். இந்த ஒளி அமைப்பு, சைன் லைட் என அழைக்கப்படுகிறது. இதன்மூலம் சூரியனை விட 10,000 மடங்கு கதிர்வீச்சு வெளிவருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் ஒரு 8x8 அங்குல (20x20cm) உலோகத் தாள் மீது 350 கிலோவாட் தேன்கூடு வடிவ வரிசையில் விளக்குகளை பொருத்தி செயற்கை சூரியனை உருவாக்கியுள்ளனர். இது 3,000 டிகிரி செல்சியஸ் வெப்பம் தரும் எனவும் கூறப்படுகிறது. சோதனை முயற்சியில் இருக்கும் இந்தப் புதிய கண்டுபிடிப்பு சூற்றுச்சூழலை பாதிக்காத ஓர் ஆற்றல் உற்பத்தி மையமாகவும், ஹைட்ரஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் முயற்சி என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை விமான போக்குவரத்து… Read More

தகவல் துணுக்குகள்

ஒருவரது ரத்த வகையை அறிந்துகொள்ள ஆய்வுக்கூடத்தில் தான் சோதனை செய்ய வேண்டும். ஆனால், சீனாவை சேர்ந்த ராணுவ மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், காகிதப் பட்டையை வைத்தே எல்லா ரத்த வகைகளையும், 30 வினாடிகளில் அறிந்துகொள்ளும் முறையை உருவாக்கியுள்ளனர். வயதானவர்கள் நிலை தவறி கீழே விழுவதால் எலும்பு முறிவு முதல், பல ஆபத்துகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க, வயதானோர் கீழே விழுவதை மூன்று வாரங்களுக்கு முன்பே கணித்து சொல்லும் முறையை, அமெரிக்காவிலுள்ள மிசவுரி பல்கலைக்கழக மருத்துவர்கள் உருவாக்கியுள்ளனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மனிதர்களின் உதட்டு அசைவுகளை படித்து புரிந்துகொள்ளும் திறனை ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்கு தந்து வெற்றி கண்டுள்ளனர். இது, மனிதர்களை விட துல்லியமாக பிறரது உதட்டசைவுகளை படித்து விடுகிறது. பி.பி.சி., செய்தி நிகழ்ச்சிகளின் ஒளிப்பதிவுகளை வைத்து ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் அந்த மென்பொருளுக்கு பயிற்சி தந்துள்ளனர். ஆஸ்திரேலிய சிலந்தி வகை ஒன்றின் விஷம், 15 நிமிடத்தில் மனிதனை கொல்லும் சக்தி… Read More

குறைந்த பக்கங்களைக் கொண்ட புத்தகங்கள்

வணக்கம் நண்பர்களை!! உங்கள் ரசனைக்கேற்ற புத்தகங்களைப் பரிந்துரைக்கும் இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன. அந்த வரிசையில், ‘ஷார்ட்புக்ஸ்’ தளம் வழக்கமான பரிந்துரைகளிலிருந்து மாறுபட்டு, குறைந்த பக்கங்களைக் கொண்ட புத்தகங்களைப் பரிந்துரைக்கிறது.Read More Read More

மொழியின் ஒலிக்குறிப்பு

உலகில் பேசப்படும் ஒவ்வொரு மொழியின் ஒலிக்குறிப்பைக் கேட்டறிய விருப்பமா? எனில் ‘லோக்கலிங்குவல்’ இணையதளம் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.Read More Read More

இசைக்கான இணைய அகராதி

இணையத்தில் இசை தொடர்பான இணையதளங்களும், சேவைகளும் அநேகம் உள்ளன. அதே போல புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்துகொள்ள உதவும் இணைய அகராதிகளும் நிறையவே இருக்கின்றன. இந்த இரண்டு அம்சங்களையும் ஒன்றாக இணைந்ததாக ‘ஆன்மியூஸிக் டிக் ஷனரி’ தளம் அமைந்துள்ளது. அதாவது இசைக்கான இணைய அகராதியாக இது உருவாக்கப்பட்டுள்ளது.Read More Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.