ஆற்றல் சக்கரங்களும் தமிழ் மொழியும்
நம் உடலில் ஏழு ஆதாரச் சக்கரங்கள் அமைந்துள்ளன. மூலாதாரம் தொடங்கி சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி, ஆக்ஞை, சஹஸ்ராரம் என்பவையே அந்த ஏழு ஆதாரச் சக்கரங்கள். இந்த ஏழு சக்கரங்களின் வழியே, நம் ஆன்மா பயணிக்கும் போது சில ஓசைகளைக் கேட்க முடியும். அந்த ஓசைகளை அறிந்து, உணர்ந்து அந்த ஒலிகளையே தனது மொழியாக்கியவர்கள் தமிழர்கள். பல்வேறுவிதமான நோய்களுக்குத் தமிழ் மொழியே மிகச்சிறந்த மருந்தாக இருக்கிறது. ஒவ்வொரு எழுத்தின் ஒலியும் நம் பிணிகளைப் போக்கும் மாத்திரைகள் போன்று செயல்படுகின்றன என்று ஆன்மிகப் பெரியோர்கள் கூறுகின்றனர். 1. மூலாதாரம்:- முதுகெலும்பின் அடிப்பாகத்தில் ஆசன வாயின் அருகே அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம். அமைப்பில் நான்கு இதழ் தாமரை போல் சிவப்பு நிறத்தில் உள்ளது. உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது. உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது.… Read More