கோடை வெயிலை சமாளிக்க
கோடை ஆரம்பமானதிலிருந்தே கொளுத்தும் வெயிலில் நடமாட முடியவில்லை. நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து கொண்டே போகிறது. உடல் பாதிப்பு, சரும பாதிப்பு, தலைமுடி பாதிப்பு, உஷ்ண கட்டிகள் என ஒரு ஆறு மாதம் நம்மை புரட்டி எடுத்து விடும். உஸ்... என்ற களைப்புப் பெருமூச்சுக்களின் ஒலி கேட்கத் தொடங்கிவிட்டது. இந்தக் கோடையை எப்படி சமாளிப்பது என்பதே இப்போது எல்லோருக்கும் அனலாய் வீசும் கேள்வி.. ஆக வருடந்தோறும் கோடையின் கடுமை கூடிக் கொண்டே போவதால் ஒவ்வொரு வருடமும் பாதுகாப்பு முறைகளை வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது. தற்போது கோடை காலத்தில் வெயிலில் நம்மை பாதுகாத்துக் கொள்ள எதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும் முதலில் உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணியவேண்டும். அந்த ஆடைகளின் வண்ணங்கள் வெண்மை கலந்ததாக இருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு மற்றும் பளிச் வண்ணங்கள் சூரிய ஒளியை உள்வாங்கும். இதனால் இவற்றை தவிர்ப்பது நல்லது. அதிக நீர் அருந்த வேண்டும். இடைவெளி விட்டு… Read More