இந்திய தேசிய விளையாட்டு தினம்
உலக அரங்கில், இந்தியா, ஹாக்கி போட்டியில் தனிச் சிறப்புடன் விளங்கியதற்கு தயான் சந்த் காரணம் ஆவார். இவர், கடந்த, 1905ம் ஆண்டு, ஆக., 29ல், உத்தரபிரதேசம் மாநிலம் அலகாபாத்தில் பிறந்தார். ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்த தயான் சந்த், தனது தந்தையின் ஹாக்கி ஆட்டத்தால் ஈர்க்கப்பட்டு, அவரும் பயிற்சியில் ஈடுபட்டார்.தனது, 16-வயதில், தந்தை விளையாடிய ஹாக்கி அணி தோல்வியை தழுவ இருந்த நிலையில், களமிறங்கிய சந்த், நான்கு கோல்கள் அடித்து, அணியை வெற்றி பெறச் செய்தார். இந்தியா சுதந்திரம் அடையாததற்கு முன்பே இந்தியா சார்பாக வீரர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். அதில் ஹாக்கி விளையாட்டில் பங்கேற்று தன் தலைமையில் தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்று தந்தவர் தான் இந்த தயான் சந்த். இவரை பலரும் அறிந்திருப்பீர்கள். இவருடைய தலைமையில் இந்தியா ஹாக்கி விளையாடிய காலத்தை இந்திய ஹாக்கியின் பொற்காலம் என்றே கூறுகின்றனர். இவரது காலத்தில் இந்தியா அசைக்க முடியாத அணியாக… Read More