உலக சிட்டுக்குருவிகள் தினம்
உலக சிட்டுக்குருவிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு பலியாகி வரும் இந்த சிட்டுக் குருவி இனத்தைக் காப்போம் என்று இந்த நாளில் நாம் சூளுரைப்போம். செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளால் இந்த சிட்டுக்குருவி இனம் அழிந்து வருவதாக பறவைகள் நல ஆர்வலர்களும், சிட்டுக் குருவி விரும்பிகளும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மனிதர்களோடு மனிதர்களாக கலந்து வாழ்ந்த இந்தச் சின்னஞ்சிறிய உயிர் அழிவின் விளிம்பில் இருக்கிறது. உயிர்பன்மயத்தை உயிர்ப்போடு வைத்திருக்க உயிர்ச்சங்கிலி எத்தனை முக்கியமானது என்பது நமக்குத் தெரியும். ஆனால், மனிதனின் ஒவ்வொரு செயலும் அந்தச் சங்கிலியின் கண்ணிகளைக் காவு வாங்கிக்கொண்டே இருக்கிறது. விளைவு, புவிவெப்பம், நோய்களின் பெருக்கம், சூழல்கேடு, ஆரோக்கியக்கேடு என நமது செயலுக்கான பலன் பலவழிகளில் திரும்ப வந்து துவைத்தெடுக்கிறது. Read More Read More