உலக சிக்கன தினம்
ஒவ்வொரு மனிதனும் தனது உழைப்பால் ஈட்டிய செல்வத்தை தன் குடும்பத்திற்கும், நாட்டிற்கும் பயன்படும் வகையில் சேமித்தல் மிகவும் அவசியமாகும். சேமிப்பின் அடிப்படையே சிக்கனம் தான். வளங்களை வீணடிக்காமல், திறமையாக கையாள்வதை இது குறிக்கும். அதாவது அவசிய தேவைகளை மட்டும் நிறைவேற்றிக் கொள்வது. சிக்கனமும், சேமிப்பும் ஒரு குடும்பத்துக்கு மட்டும் பயன் அளிப்பதில்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனாலேயே வங்கிகள், சேமிப்பு கணக்குக்கு அதிக வட்டி அளித்து ஊக்கப்படுத்துகின்றன. சிக்கனமாக சேமிக்கப்பட்ட பணம் தான், எல்லா தொழில்களுக்கும் மூலதனம். "சிறுக கட்டி பெருக வாழ்" என்பதற்கேற்ப எதிர்கால வாழ்க்கை ஒளிமயமாக திகழ்ந்திட சிறு வயது முதலே அனைவருக்கும் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தல் வேண்டும். சிறுசேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்வதால் அந்தத் தொகைக்கு உத்தரவாதமும், சிறுக சிறுக சேமிக்கும் தொகை பெருகி அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் பயன்படுகிறது. 1924 அக்., 31ல், இத்தாலியின் மிலன் நகரில், சர்வதேச… Read More