X

religion

காரியம் மற்றும் கடவுள்

?எந்த காரியத்திற்கு எந்த கடவுளை வணங்க வேண்டும் தெரியுமா? ? எல்லா தினங்களுமே தெய்வத்தை வழிபடும் நாட்கள் தான். இறைவனை எப்படி வணங்கினாலும் பலன் கிடைக்கும். ஆனால் ஒவ்வொரு பலனைப் பெறவும், கடவுளின் வெவ்வேறு வடிவங்களை கும்பிடுவதும், குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட தெய்வத்தை ஆராதிப்பதும் கூடுதல் பலன் கிட்ட வேண்டும் என்பதற்காக தான். நாம் செய்யும் செயல் வெற்றி பெற எந்த கடவுளை வணங்க வேண்டும் என்பதை பார்ப்போம். நினைத்த காரியம் நடக்க : ? விக்னங்கள், இடையு றுகள் நீங்க - விநாயகர் ? செல்வம் சேர - ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர் ? நோய் தீர - ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி ? வீடும், நிலமும் பெற - ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான் ? ஆயுள், ஆரோக்கியம் பெற - ருத்திரன் ? மனவலிமை, உடல் வலிமை பெற - ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்… Read More

சங்கடகர சதுர்த்தி விரதம்

சங்கடகர சதுர்த்தி விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று. மாதந்தோறும் தேய்பிறையில் வரும் சதுர்த்தித் திதியில் இவ்விரதம் கடைபிடிக்கப்படும். இந்நாளில் பகல் பொழுதும் உண்ணாநோம்பிருந்து மாலையில் விநாயகரை பூசை செய்து உடன் சந்திரனையும் தரிசித்தல் செய்ய வேண்டும். இறுதியாக விநாயகருக்குப் பிடித்த இனிப்பினை உண்டு விரதத்தினை முடிக்க வேண்டும். மாசி மாதம் தேய்பிறையில் செவ்வாய்க்கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் துவங்கி விதிப்படி ஓராண்டு கடைபிடித்தால் எல்லாத் துன்பங்களும் நீங்கப்பெற்று செல்வம், செல்வாக்கு கல்வி முதலிய எல்லா இன்பங்களையும் எய்தலாம் என்பது நம்பிக்கையாகும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதை அங்காரக சதுர்த்தி என்பார்கள். அங்காரகனான செவ்வாய், விநாயகரை பூஜித்ததன் மூலமே நவக்கிரக நாயகர்களில் ஒருவன் என்ற பதவியை பெற்றான். அதனால் தான் செய்வ்வாய்க்கிழமை சதுர்த்தி விசேஷமாகச் சொல்லப்படுகிறது. பிரதிமாதமும் பவுர்ணமிக்கு அடுத்த நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தியாகும். சதுர்த்தி என்றாலே நான்காவது என்றுதான்… Read More

ஸ்நானம்

மனு ஸ்மிருதியிலும் குளியல் பற்றி நிறைய குறிப்புகள் உள்ளன. இந்துக்களின் வாழ்வு — நீருடன் ஒன்றிணந்தது. பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா சடங்குகளிலும் “ஜலம்” உண்டு. பிராமணர்கள் அனுதினமும் தண்ணீரை வைத்துக்கொண்டு மும்முறை தொழ வேண்டும். ஸ்நானம் என்றால் நதியில் நீராடுவதும் அல்லது பக்கெட்டில் இருந்து எடுத்து உடலில் ஊற்றிக்கொள்வதும் பளிச் சென்று நம் நினைவுக்கு வரும். ஸ்நானம் என்பதை எங்கெங்கு எப்படிச் செய்ய வேண்டும் என்பதை நமது சாஸ்திரங்களில் இருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ள  முடிகின்றது. ஸ்நானங்கள் இரு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை முக்கிய ஸ்நானம், கௌண ஸ்நானம் ஆகும். க்ரியா ஸ்நானம், காம்ய ஸ்நானம், நைமித்திக ஸ்நானம், க்ரியாங்க ஸ்நானம் மலாபாஹர்ஷண ஸ்நானம், நித்ய ஸ்நானம் ஆகியவை முக்கியமானவை.Read More Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.