ரதசப்தமி – 2018
அன்பு நெஞ்சங்களுக்கு எனது வணக்கம். இன்று ரதசப்தமி எனும் விசேஷமான நாள். உலகின் இருள் நீக்கி ஒளி தரும் சூரிய பகவானின் அருளை அனைவரும் பெறுவதற்கு சூரிய ஜெயந்தியான ரதசப்தமி. ரதசப்தமி அன்று தான் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் உலா வரும் சூரியபகவான் உதித்தார் என்கின்றன புராணங்கள். நமது கலாச்சாரத்தில் சூரிய வழிபாடு என்பது மிக முக்கியமான ஒன்றாக கருதப்பட்டு வருகின்றது. சூரிய ஒளி இல்லா விடில் பூவுலகில் எதுவுமே இருக்க முடியாது. எனவேதான் உயிர்களைக் காக்கும் திருமாலும் சூரியனும் ஒன்றாகக் கருதப் படுகின்றனர். சூரிய பகவானின் ரதத்திற்கு அருணன் சாரதியாக உள்ளார் ரதசப்தமி நாளன்று எருக்க இலை வைத்து ஸ்நானம் செய்து பின் சூரியனை வழிபடுவதன் மூலம் நீடித்த ஆயுளும் உடல் நலமும் பெறலாம். இந்த சூரிய வழிபாட்டின் மூலம் சூரியன் சாந்தியடைந்து உலகிற்கு நன்மை செய்வதுடன் பூஜிப்பவர்களுக்கும் வளமும் நலமும் தந்து அருள்கிறார். நீடித்த ஆயுள், இளமை,… Read More