பித்ரு பட்சம்
பித்ரு பட்சம் அல்லது பித்ர் பக்ஷம் அல்லது பித்ரி பக்க்ஷா, (வடமொழியில் "முன்னோர்களின் பதினாறு நாட்கள்" எனப் பொருள்படும்) இந்த 16–சந்திர நாட்கள் கொண்ட பட்சம் இந்துக்கள் தங்கள் முன்னோர்களை வழிபடும் (பித்துருக்கள்) காலமாகக் கருதப்படுகிறது. இந்நாட்களில் இறந்தவர்களுக்கு உணவு படைத்து வழிபடுகிறார்கள். இச்சடங்கு மகாளய பட்சம் என்றும் வழங்கப்படுகிறது. இந்த பட்சம் மேற்கு மற்றும் தென்னிந்தியாவில் இந்திய அரசு நாட்காட்டியில் பாத்திரபத மாதத்தில் (தமிழ் மாதங்கள் ஆவணியின் இறுதி அல்லது புரட்டாசி மாத முதல்) முழு நிலவு அன்று துவங்கி அடுத்த அமாவாசை நாள் (இந்த அமாவாசை மகாளய அமாவாசை எனப்படுகிறது) வரை கடைபிடிக்கப்படுகிறது. வட இந்தியாவிலும் நேபாளத்தில் பாத்திரபத மாதத்திற்கு மாற்றாக அசுவின் மாதத்தில் உள்ள தேய்பிறை நாட்களில் கடைபிடிக்கப்படுகிறது. "மகாளயம்' என்றால் "கூட்டமாக வருதல்'. மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மகாளய பட்சம். புரட்டாசி மாதத்தில் வரும், மகாளய அமாவாசை, முன்னோர்கள் பூலோகம் வரும்… Read More