மந்திரம் ஓம்
ஓம் மந்திரத்தை பற்றிய பதிவு!! பத்மாசனத்தில் அமர்ந்து இடது கைப்பெருவிரலால் இடது மூக்கை மூடி வலது நாசியால் மூச்சை உள்ளிழுத்து இடது கை மோதிர விரல் கொண்டு வலது நாசியை மூடி இடது நாசியால் மூச்சை வெளிவிடுவது என்பதை மூச்சு பயிற்சி என்கிறோம். இதில் மூச்சை உள்ளிழுப்பதை பூரகம் என்பார்கள். வெளிவிடுவதை ரேசகம் என்பார்கள். நன்றாக மூச்சு பயிற்சியை கற்றவர்கள் அதன் அடுத்த படியான மூச்சை உள்ளுக்குள் அடக்கி நிறுத்தி வெளிவிடும் பயிற்சியை மேற்கொள்ளலாம். மூச்சை அடக்கும் நிகழ்வை கும்பகம் என்பார்கள். எடுத்த எடுப்பில் மூச்சை அடக்கி வெளிவிடுதல் உடலுக்கு மிகவும் கெடுதலான பலனை தரும் என்பார்கள். எனவே, சாதாரண வாழ்வில் இருக்கும் அனைவருக்கும் ஏற்றது ஓம் என்னும் தியான மூச்சு பயிற்சி. அதாவது, ஓம் என்ற ஒலி தான் இந்த மூச்சு பயிற்சியின் சூட்சுமம். மூச்சை முடிகிற வரை உள்ளிழுக்க வேண்டும். மூச்சை உள்ளிழுக்கும் போது மார்பு நன்றாக விரிந்து… Read More