இந்திய தேசிய தொழில்நுட்ப தினம்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் இந்தியாவின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதத்திலும், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் விதத்திலும், வருங்கால இளைஞர்களுக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கிலும் மே 11ம் தேதி, தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது. அறிவியல், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மே 11ல் என்ன நடந்தது:ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் 1998 மே 11ம் தேதி, இந்தியா மூன்று அணுகுண்டு சோதனைøயும், மே 13ம் தேதி இரண்டு அணுகுண்டு சோதனைøயும் வெற்றிகரமாக நடத்தியது. இதன் மூலம் உலகின் அணுஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது. இதனை அங்கீகரிக்கும் விதமாக இந்த நாளே "தேசிய தொழில்நுட்ப தினமாக' அறிவிக்கப்பட்டது. இன்றைய தினம் நாட்டின் தலைநகரான புதுதில்லியில் நடக்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டு பல்வேறு விருதுகளை வழங்குவதும் வழக்கமானது. விண்வெளி, பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில், இந்தியா… Read More