X

National Hand loom Day

இந்திய தேசிய கைத்தறி தினம்

நாடு முழுவதும் இன்று தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நெசவாளர்களை கவுரவிக்கும் விதமாக இந்த தினம் 2015 ஆண்டு முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது அந்நியத் துணிகளை புறக்கணிக்கும் விதமாக 'சுதேசி இயக்கம்' 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதன் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்டவற்றின் அங்கமாக கைத்தறி பொருட்களை பயன்படுத்துவதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர வாய்ப்புள்ளது. நம் நாட்டில் கிட்டத்தட்ட 43 லட்சத்துக்கும் அதிகமானோர் கைத்தறி சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துளள்து. மேலும், நமது நாட்டின் கலாச்சார பண்பாட்டை தெரிவிக்கும் இந்த தொழிலை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து நாடு முழுவதும் 'தேசிய கைத்தறி தினம்' கொண்டாடப்படுகிறது. நமது கைத்தறி துறை பன்முகத் தன்மை கொண்டது. சுற்றுச் சூழலுக்கு உதவக்கூடியது.… Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.