பஞ்சபுராணம்
பஞ்சபுராணம் பற்றி ஒரு சிறு குறிப்பு திருக்கோயில்களில், பூசையின்போது “பஞ்ச புராணம்” ஓதுவது வழக்கம். பன்னிரு திருமுறைப் பாடல்களிலே ஐந்து பாடல்களை தேர்ந்தெடுத்து ஓதுவதே பஞ்சபுராணம். அவற்றை ஓதும் வரிசை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. 1. தேவாரம் 2. திருவாசகம் 3. திருவிசைப்பா 4. திருப்பல்லாண்டு 5. திருப்புராணம் நமது வாசகர்களுக்காக இந்த சுலப பஞ்சபுராணம் விநாயகர் வணக்கம் "ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே." தேவாரம் - ( திருஞானசம்பந்தர் அருளியது ) "தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண்மதி சூடிக் காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன் ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே." திருவாசகம் - ( மாணிக்கவாசகர் அருளியது ) "பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய… Read More