தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்திலே பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப் படுகின்றது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக (பறுவம்) இருக்கும்.தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமாகும். தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு சஷ்டி கவசம், சண்முக கவசம்,திருப்புகழ் போன்ற முருகனருள் பெற உதவும் பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தும் தங்கள் விரதத்தை முடித்துக் கொள்வார்கள். மேலும் காவடி எடுத்தல் மற்றும் பால் குடம் தூக்குதல் போன்ற நிகழ்வுக்கு பிறகு கோவிலில் அன்னதானம் வழங்ககப்படும் . மக்கள் கோவில்களில் முருகனை வேண்டி வழிபடுவது வழக்கம் . தைப்பூசத்தில் மாலை நேரத்தில் பழனி கோயிலில் தேரோட்டம் நடைபெறும், சந்திரகிரகணத்தால் பகல் 11.00 மணிக்கு நடக்கவுள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பும்… Read More