பணம் சார்ந்த பழமொழிகள் / அனுபவ மொழிகள்
தேவையானதை வாங்காதே.தவிர்க்கமுடியாததை வாங்கு. ஒரு பொருளை அடகுவைப்பதை விட, விற்றுவிடு. உடனே கொடுத்தவன், இரு மடங்கு கொடுத்தவனாகிறான். பணம் நல்ல பணியாள்;ஆனால் மோசமான எஜமான். உனது வாயையும்,பணத்தையும் கவனமாக திற! அப்போதுதான் இரண்டிற்கும் நல்ல மதிப்பிருக்கும். செல்வம் என்பது வருமானத்தைப் பொறுத்தது அல்ல.நிர்வாகத்திறமையைப் பொறுத்தது. செலவுகள் யாவற்றிலும் காலத்தை வீணாக்குவதே அதிகச் செலவும்,ஊதாரித்தனமும் ஆகும். ஊதாரி தன் வாரிசையே கொள்ளையடிக்கிறான்.கஞ்சன் தன்னையே கொள்ளையடிக்கிறான். லாபத்தினால் மட்டும் ஒருவன் பணக்காரனாவதில்லை.சேமிப்பதால் மட்டுமே ! ஒருமுறை சேமித்த பணம் , இருமுறை சம்பாதித்த பணத்திற்குச் சமம். முதுமைக்காலத்தில் அடுத்தவர் கட்டுப்பாட்டில் உள்ள பணம், நமது ஆயுள்காலச்சிறைக்குச் சமம். (படித்ததில் பிடித்தது) Read More