குத்து விளக்கை சுத்தப்படுத்தும் நாட்கள்
குத்து விளக்கை துலக்கி சுத்தப்படுத்தும் பணியினை செய்ய குறிப்பிட்ட நாட்கள் உண்டு. ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் மட்டும் தான் குத்து விளக்கை தேய்க்க வேண்டும். திங்கள் நடு இரவு முதல் புதன் நடு இரவு வரை குபேர தன தாட்சாயணியும், குக குரு தன தாட்சணியும் குத்து விளக்கில் பூரணமாய் குடியிருப்பதாய் கூறப்படுகின்றது. எனவே இந்த நாட்களில் விளக்கினை தேய்த்து கழுவினால் இந்த சக்திகள் விலகிப் போகுமென்பது நம்பிக்கை. வெள்ளியன்று கழுவுவதால் அதில் குடியிருக்கும் குபேர சங்க நிதியட்சிணி விலகிப்போய்விடும் என்பதும் மக்களின் பரவலான நம்பிக்கை. ஞாயிறன்று விளக்கை துலக்கி தீபம் போடுவதால் கண் சம்பந்தமான நோய்கள் அகலும். மனம் நிலைப்பட திங்கள் அன்று துலக்கி தீபம் ஏற்ற வேண்டும். குரு பார்வை இருந்தால் கடினமான வேலைகளையும் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் எளிதாக செய்ய முடியுமே. வியாழன் அன்று தீபமேற்றினால் குருவின் பார்வையும் அது தரும் கோடி… Read More