கோலங்கள் – 1
வணக்கம் அன்பர்களே!! எனது முந்திய பதிவு கோலங்கள் தொடர்ச்சி தான் இந்த பதிவு. தமிழ் வீடுகளின் வாசல்களில் செடிகளே இல்லாமல் பூக்கும் பூவாக கோலங்கள் தினந்தோறும் பூக்கின்றன. பழங்காலம் முதல் இது நாள் வரை தமிழர்களின் பண்பாடோடு தொடர்ந்து வருகின்றது கோலக்கலை. கோலம் என்பது அழகினை குறிக்கின்றது. கோலக்கலையை சித்ரக்கலா எனவும் குறிப்பிடுவர். நம்முடைய இந்துக்களின் கலாச்சாரத்தில் அடங்கியுள்ள அனைத்து பழக்க வழக்கங்களுக்கும் ஓர் அர்த்தம் உண்டு. சில பழக்க வழக்கங்களின் பின் மறைந்துள்ள பல அறிவியல் அர்த்தங்கள் காலப்போக்கில் மறந்துப் போக இவை மூட நம்பிக்கைகள் என முத்திரைக் குத்தப்பட்டுள்ளன. பொதுவாக, தமிழர்களுடைய வாழ்க்கை முறை என்பது இயற்கையோடு இயைந்து வாழ்கிற வாழ்க்கை முறை. மற்றவர்களை விட நாம் இயற்கையை நேசிக்கக் கூடியவர்கள். இயற்கையை அரவணைத்து வாழக்கூடியவர்கள். இந்த பூமியின் மண்ணின் தன்மை கெடாமல் இருப்பதற்காக நாம் பசு சாணத்தைத் தெளிக்கிறோம். பசு சாணத்தால் ஆன ஈரம், ஓசோன் வாயுப் படலம்… Read More