நிதிக்கல்வி
வணக்கம். அண்மையில் விகடனில் படித்தவை. உங்கள் அன்புப் பிள்ளைகளின் நிதி எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் சிந்திக்காமல் இருக்க மாட்டீர்கள். எல்லா பெற்றோர்களின் கனவும் என் மகன்/மகள், எதிர்காலத்தில் நன்றாக வாழ வேண்டும்; யாரையும் எதிர்பார்த்து இருக்கக் கூடாது' என்பதே. அதற்காகத்தான்எப்பாடுபட்டாவது அவர்களுக்கு நல்ல வருமானம் ஈட்டித்தரும் கல்வியை அளித்துவிட வேண்டும்' என நினைக்கின்றனர். இதன் விளைவாகவே கல்லூரிகளும் சிறப்பு வகுப்புகளும் அதிகரிக்கின்றன. ஆனால், பெற்றோர்கள் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். குழந்தைகளுக்கு சிறப்பான கல்வி அவசியம்தான். ஆனால், வாழ்க்கைப்பாடம் அதைவிட அவசியம். ஒருகாலத்தில், வாழ்க்கை என்பது தனக்கான உணவை தானே தயாரித்து உண்டு வாழ்வது என்று இருந்தது. நாளடைவில் அது அடுத்து வரும் சந்ததிக்கான தேவையையும் சேர்த்து நாம் சேமித்துவைக்கவேண்டிதாயிற்று. குடும்பம் என்ற அமைப்புக்குள் பொறுப்பு என்ற சுமை தானாகவே எல்லோர் மீதும் வலிந்து திணிக்கப்பட்டுவிடுகிறது. அதனால் எதிர்காலத்தை எதிர்கொள்ள நம் பிள்ளைகளைத் தயார்செய்யவேண்டியிருக்கிறது. பிள்ளைகளுக்கு பணம், சேமிப்பு, முதலீடு என்பதைப் பற்றியெல்லாம் கற்றுக்கொடுக்கவேண்டியிருக்கிறது.… Read More