சர்வதேச அருங்காட்சியக தினம்
ஒவ்வொரு ஆண்டிலும் மே 18ம் தேதி உலகலாவிய ரீதியில் சர்வதேச அருங்காட்சியக தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு சமூகத்தின், ஒரு தேசத்தின் மரபுரிமைகளைப் பேணி பாதுகாப்பதில் அருங்காட்சியகத்தின் பணி மிக முக்கியமானது.அதன் பரிமாணத்தை அளவிட முடியாது. கால காலங்களாக வரலாற்று மாற்றங்களின் சாட்சியங்களாக விளங்கும் அருங்காட்சியகங்கள் நாளைய சந்ததியின் விலை மதிக்க முடியாத சொத்துக்கள் நவீன உலகின் மிகப் பெரிய அருங்காட்சியகம் லண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகமாகும். உலகிலுள்ள ஒவ்வொரு நாடுகளிலும் பொதுவாக தேசிய அருங்காட்சியகங்கள் காணப்படுகின்றன. இந்த அருங்காட்சியகங்கள் பொதுப்படையாக அன்றேல் பல்வேறுபட்ட அலகு ரீதியாக அமைந்திருக்கும். இன்றைய உலகில் பல்வேறு நாடுகளில் தனியார் அருங்காட்சியகங்களும் காணப்படுகின்றன. Read More Read More