தெரியுமா
இன்று திங்கக்கிழமை பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்- கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா. என்ற அவ்வையார் அருளிய விநாகயகர் பாடல் மற்றும் இயற்கை அன்னையை நமஸ்காரம் செய்து இன்றய நாளை தொடங்குவோமாக. கடந்த வெள்ளி அன்று RBI வெளியிட்ட அறிக்கையில் மொபைல் பணப்பைகள் மூலம் பரிவர்த்தனைகள் மதிப்பு ஜூலை மாதம் ₹ 15,202 கோடி ஒரு சாதனை படைத்துள்ளது. டேட்டா செட் சர்ச் என்ற புதிய தேடுதல் சேவையை தொடங்கியுள்ளது கூகுள் நிறுவனம். பயனாளர்கள் தங்களுக்கு தேவையான தரவுகள் பற்றி இதில் தேடலாம். வெறும் டேட்டா குறித்த தகவல்கள் மட்டுமே இதில் காட்டப்படும். ஏர்டெல் பேமெண்ட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு, கார்டு பயன்படுத்தாமல் ஏ.டி.எம்மில் பணம் எடுக்கும் வசதியை ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது Read More