இந்திய தேசிய அறிவியல் தினம்
தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 1987 - ஆம் ஆண்டு இந்தத் தேசிய அறிவியல் நாள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவரும் சிறந்த இயற்பியல் மேதையுமான சர். சி. வி ராமன்(சந்திரசேகர வெங்கடராமன்) தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது. சி.வி.ராமன், ‘ராமன் விளைவை' கண்டறிந்த தினம். இதுவே இந்தியாவின் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. திருவானைக்காவலில் பிறந்த இவர், படிப்பில் பயங்கர சுட்டி. அப்போதே ஆங்கிலத்திலும் இயற்பியலிலும் தங்கப் பதக்கம் பெற்றவர். முதலில் அக்கவுண்டண்டாக அரசாங்கத்தில் வேலை பார்த்து வந்த இவர், இரவெல்லாம் ஆய்வுகள் செய்வார். பிறகு, இணைப் பேராசிரியராக கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இருக்கிறபொழுது ஹவுராவில் எளிய பொருட்களை… Read More