ஹோரை
✿ ஒரு நாளின் அறுபது நாழிகை நேரத்தில் சில நாழிகைகள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகத்தினதும் தனித்துவமான ஆதிக்கத்தில் இருக்கும். அந்த நேரம் அந்த கிரகத்தின் ஹோரை என்று அழைக்கப்படும். ஹோரை என்பதை ஓரை என்றும் அழைப்பர். நிழல் கிரகங்களான ராகு, கேதுவிற்கும் ஹோரை குறிக்கப்படவில்லை. ஒவ்வொரு நாளும் துவங்கும் போது எந்த கிரகத்தின் ஹோரையுடன் துவங்குகிறது என்றும் வரையறுத்து வைத்திருக்கின்றனர். அதன் படியே அந்த நாளின் மற்ற ஹோரைகள் கணக்கிடப்படுகிறது.Read More Read More