குழந்தை வளர்ப்பு
குழந்தைகள் வளர்ப்பதில், வளர்வதில் அல்லது பராமரிப்பதில் பெற்றோர் பங்கு மிகவும் வலிமைமிக்கதாக இருக்கிறது. குழந்தை வீட்டில் வளரும் விதம் அல்லது வளர்க்கப்படும் விதம் அதன் எதிர்காலத்தை அழகும் அர்த்தமும் உள்ளதாக ஆக்கிக்கொள்ள அல்லது அசிங்கம் நிறைந்தாக மாற்றிக்கொள்வதற்கான மிக முக்கிய திறவுகோலாக அமையலாம். குழந்கைள் பராமரிப்பதற்கு முறையான வழிமுறைகள் இருக்கின்றன. குழந்தை வளர்ப்பது ஒரு ‘கலை’ என்றும் குறிப்பிடப்படுகிறது. சரியான முறையில் குழந்தைகளைப்பராமரிக்க வேண்டும் அல்லது வளர்க்க வேண்டும் என்று பெற்றோர்கள் ஆசையும் அவாவும் கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள். குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமானது, அந்தக் குழந்தையுடன் நன்கு உரையாடல் நிகழ்த்துவது. பேசப் பேசத்தான் அந்தக் குழந்தையுடன் நெருக்கமான ஸ்நேகம் பெற்றோர்க்குக் கிடைக்கும். அந்த உரையாடல்களே பிள்ளையின் மனதை நன்கு புரிந்துகொள்ள உதவும். மேலும், அதன் தேவை என்னவென்பதையும் உணர்த்தும். சில விஷயங்களைப் பெற்றோரிடம் கூற, குழந்தை தயங்கிக்கொண்டிருக்கலாம். அந்தத் தயக்கத்தை உடைக்க வேண்டியது குழந்தை வளர்ப்பில் அவசியம். பெற்றோர், தங்கள் பிள்ளை… Read More