உலக காடுகள் தினம்
மார்ச் 21-ம் தேதியான இன்று உலக காடுகள் தினம் கொண்டாடப்படுகிறது. காடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தினமானது கடைப்பிடிக்கப்படுகிறது. காலநிலையை சீராக வைத்துக்கொள்வதில் காடுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இது தவிர, மனிதனுக்கும் விலங்குகளுக்கும் முன்னொரு காலத்தில் காடுகள்தாம் புகலிடம். நாளடைவில் நாகரிகம் வளரத்தொடங்கியவுடன் மனிதன் காட்டை அழித்து நிலங்களைப் பிரித்துக்கொண்டான். ஆனால் இன்னும் காடுகள் வன விலங்குகளுக்குப் புகலிடமாகவே விளங்குகிறது. அதேபோல மனிதன் வாழ்வதற்குத் தேவையான காற்றினைக் கொடுப்பதில் காடுகளின் பங்கு மிக அதிகம். இந்தக் காடுகள்தாம் மனித இனத்தின் வரம். மனிதன் வாழ இன்றியமையாத தண்ணீரை மழை மூலமாகவும், மண் அரிப்பினைத் தடுப்பது மூலமாகவும், பழங்களை உணவாகக் கொடுத்தும் மனிதனுக்குப் பல வழிகளில் காடுகள் உதவியாக இருந்துவருகின்றன. Read More Read More