பூக்களின் ஏழு பருவங்கள்
ஒரு பூவானது நிஜத்தில் பல பரிணாமங்களை கொண்டது. ஆனால் நாம் அதை எளிதாக பூ அல்லது மலர் என சொல்லி விடுகிறோம். ஒரு பூவின் முதல் நிலை அரும்பு. அதாவது பூக்கும் செடி கொடிகளில் மலரும் முன் இதழ்கள் குவிந்து மிகச் சிறியதாக இருக்கும் மொட்டின் நிலை. அரும்பு பெரிதானால் மொட்டு நிலையை அடையும். அரும்பின் மூன்று நிலைகள் நனை, முகை, மொக்குள் என்பவையாகும். அதை தொடர்ந்து இரண்டாம் நிலையான மொக்கு விடும் நிலை. இது அரும்பு பெரிதாகி மலரும் முன் இருக்கும் நிலை. அடுத்து மூன்றாம் நிலையான மொட்டு, முகிழ்க்கும் நிலையான முகை. இதையே நறுமுகையே என பல கவிகளும் பாடுகின்றனர். அதைத் தொடர்ந்து நான்காம் நிலையான,மலரும் நிலை.அதாவது மலர். இது நாம் அனைவரும் நன்கு அறிந்த, மிக எளிமையாய் காணக்கிடைக்கும் பூக்களின் நிலை. மேல் சொன்ன மூன்று நிலைகளும் பொதுவாக பூக்களை விரும்பி வளர்ப்பவர்களே பொதுவாக கண்டு அறிந்திருக்கும்… Read More