குழந்தையின் பிளஸ் பாயின்டைச் சொன்னால் அவர்களது தயக்கம் உடைக்கலாம்
ஓயாமல் வாயடிக்கும் டிவி, தொட்டால் சிலிர்க்கும் ஸ்மார்ட் போன், நகக் கண்களில் விரையும் தொடு திரை. இப்படி குழந்தைகளைச் சுற்றிலும் ஏதேதோ பேசிக் கொண்டே இருக்கிறது. குழந்தைகள் பேசுவது மெல்லக் குறைந்து வருகிறது. அப்படியே பேசினாலும் குறுந்தகவல் பாஷை போல ஓரிரு வார்த்தைகளில் முடிந்து விடுகிறது. இதனால் குழந்தைகள் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தவே தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த தயக்கம் அவர்களது வாழ்க்கை முழுவதும் தாழ்வு மனப்பான்மையாகப் படர்ந்து அவர்களது வளர்ச்சியை துவக்கத்திலேயே தடுக்கிறது. தனக்கு என்ன வேண்டும் என்று சொல்லும் குழந்தைகளால் தான் மிகப்பெரிய லட்சியங்களை எட்டித் தொட முடியும் என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மாபெரும் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் நின்று கொண்டிருக்கும்., அவர்கள் முன்பு ஒரு கேள்வி கேட்கப்படும். அதற்கான பதில் நூற்றுக் கணக்கான குழந்தைகளுக்கு தெரிந்திருக்கும். ஆனால் எனக்கு தெரியும் என்று சொல்ல ஏதாவது ஒரு சில குழந்தைகளே முன்வருகின்றன. அவர்களில் சிலரையும் யாராவது சொல்… Read More