தந்தையர் தின வாழ்த்துக்கள்
தான் பல இடத்தில் தவறி விழுந்தாலும், தன் பிள்ளை எந்த இடத்திலும் தவறி விழக்கூடாது என நினைக்கும் தெய்வம் அப்பா. அன்பை உள்ளே வைத்துக் கொண்டு எதிரிப் போல் தெரியும் ஒரே உறவு அப்பா ! ‘முடியாது’ என்ற ஒற்றை வார்த்தையில் கொடுத்த செயற்கை வலியால் ‘முடியும்’ என்ற நம்பிக்கையை விதைத்தவர் அப்பா ! கொண்டுவந்தால் தான் தந்தை என்று யார் பொய் சொன்னது தான் கொண்டதை எல்லாம் கொடுப்பவர் தந்தை உண்மை சொல்கிறது ! மகனிடம் தோற்பதை லட்சியமாய் கொண்டவர்! மகன் தோற்றாலும் வெற்றிக்கு நம்பிக்கை கொடுப்பவர் ! மகன் நடைபயில மகன் வேகத்துக்கு நடப்பவர் ! மகன் ஒடுவதை ஒதுங்கி நின்று ரசிப்பவர் ! முதுமையில் மகன் கரம் பிடித்து குழந்தைப் போல் நடப்பார் அப்பா ! பேரன் பேத்தியிடம் விளையாடும் போது அம்மாவை பாட்டியாக பார்க்கலாம் பேரன் பேத்தியிடம் விளையாடும் போது அப்பாவை குழந்தையாக தெரிவார் !… Read More