மகிழ்ச்சிக்கான மந்திரங்கள்
மகிழ்ச்சி மற்றும் தனிமனிதப் பரிபூரண நிலை (Personal Fulfillment) என்ற இரண்டும் சரியான விஷயங்களைச் செய்வதனாலேயே ஏற்படுகிறது. உலகத்தைப் புரிந்து கொள்கிறேன் என்று நினைக்காமல், என் பாதையை சரியானதாக மாற்றிக் கொள்வேன் என்று செயல்படுவதும், தார்மீக ரீதியான முன்னேற்றங்களைத் தொடர்ந்து மேற்கொள்வேன் என்று நினைக்கச்சொல்லும் சித்தாந்தத்தினை கொண்டவர் எபிக்டெடஸ். இவர் தன் கருத்துகளை, அவருடைய சீடர் களிடையே உரையாக நிகழ்த்தியுள்ளார். அவரது சீடர்களே அவற்றை எழுத்து வடிவில் எழுதிப் பாதுகாத்துள்ளனர். ராணுவ வீரர்கள் போருக்குப் போகும் போது ஒரு கையேட்டினை எடுத்துச் செல்வார்கள். அந்த வடிவமைப்பிலேயே எபிக்டெடஸின் கருத்துகளும் கையேடாகத் தரப்பட்டுள்ளது. ஷரான் லீபெல் என்பவர் தொகுத்து தந்துள்ள கிரேக்க தத்துவ ஞானியான எபிக்டெடஸ்-ன் ‘வாழ்வதற்கான கையேடு’ என்கிற புத்தகம். Read More Read More