இந்திய பொறியாளர்கள் தினம்
இந்தியாவில், Sir பட்டம் பெற்ற பாரத ரத்னா விருது வென்ற இந்தியாவின் தலைசிறந்த பொறியாளரான, Sir MV என்று பரவலாக அறியப்பட்ட ’மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வராயா’ அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15’ஐ ஒவ்வொரு ஆண்டும் பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. ’மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வராயா’ 1860ம் ஆண்டு மைசூரில் ஒரு சிறிய கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த இவர் தன் 12ம் வயதிலேயே தந்தையை இழந்தவர். தனது பள்ளி படிப்பை சிக்கபல்லாபுராவிலும், இளங்கலை பட்டத்தை செண்டரல் காலேஜ், பெங்களூரிலும் முடித்தார். பின் கட்டிட பொறியியல் (civil engineering) படிப்பை புகழ்பெற்ற பூனே பொறியியல் கல்லூரியில் பயின்றார். ஆரம்பத்தில் மும்பை பொதுப்பணித்துறையில் வேலை பார்த்த இவர் பின்னாளில் இந்திய நீர்ப்பாசன கமிஷனில் பணியை தொடர அழைக்கப்பட்டார். இந்திய நீர்ப்பாசன துறையில் வேலை பார்த்த காலத்தில் மிகவும் சிக்கலான நீர்ப்பாசன அமைப்பை தக்காணப் பீடபூமி பகுதியில் செயல்படுத்தினார். இவரின் புகழுக்கு உச்சமாக கருதப்படுவது தெலுங்கானா ஹைதராபாத் நகரில் வெள்ளப்… Read More