எமோஜி
வணக்கம். இன்று தகவல் தொழில்நுட்பம் மற்றும் சோசியல் மீடியாக்களில் நாம் அனைவரும் பயன்படுத்துவதை பற்றி பார்ப்போம். இதைப் பார்த்ததுமே “ஹாய்..வணக்கம். நல்லாருக்கீங்களா?” என கேட்கிறார்கள் என்பது புரிந்து விட்டதா? இதுதான் டிரெண்டிங் ஸ்டைல். ”என் ஹார்ட்ல நீதான் டார்லிங் இருக்க” என்பதில் தொடங்கி “எனக்கு ஹார்ட்ல பிளாக்காம்” என்பதுவரை அனைத்தையும் எமோஜிக்களிலே சொல்லி வருகிறார்கள் முட்டிக்கு மேல பேண்ட் போடும் நெக்ஸ்ட் ஜெனரேஷன் இளைஞர்கள். தெருவுக்கு நான்கு ரீசார்ஜ் கடைகள் போல எல்லா சோஷியல் மீடியாக்களிலும், மொபைல் ஃபோன்களிலும் நிறைந்திருக்கும் இந்த எமோஜி எப்போ, எங்க பொறந்தது தெரியுமா? 1998ல் ஜப்பான் எண்டிடி டொகொமோ என்ற நிறுவனம்தான் எமோஜிக்கு பிள்ளையார் சுழி போட்டது. அந்த டீமில் இருந்த ஷிகேடிகா குரிடா என்பவர் மூளையில் அடித்த ஸ்பார்க்தான் இன்று எல்லா மொபைல்களிலும் மின்னிக் கொண்டிருக்கிறது. பொதுவாக ஜப்பான் கலாசாரத்திலே படங்களுக்கு முக்கியத்துவம் அதிகம். அவர்கள் எழுத்துருவே சித்திரங்கள் தான். ஜப்பான் நாட்டு ரமணன்… Read More