நம் கல்வி முறை
வணக்கம் நண்பர்களே. இன்று இணையத்தில் உலாவியபோது விகடன் இணையதளத்தில் ஒரு கட்டுரை இன்றய கல்வி திட்டத்தின் அடிப்படை பிரச்சனை தற்சயலாக படிக்க நேர்ந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை. வேலையில்லாத் திண்டாட்டம், புதிய சிந்தனையின்மை, திறன் குறைவு என, இன்று நம் இளைஞர்கள் சந்திக்கும் அத்தனை பிரச்னைகளுக்கும் நாம் சொல்லும் ஒரே காரணம் `நம்முடைய கல்வித்திட்டம் சரியில்லை' என்பதுதான். கல்வித் திட்டத்தில் உள்ள குறைகளை, இன்று நாம் ஒவ்வொருவரும் பட்டியலிடுகிறோம். அடிப்படையில், அத்தனை குறைகளுக்கும் காரணமாக இருப்பது ஒன்றுதான். அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சிக்குப் பேர்போன அமெரிக்காவின் `நாசா' அமைப்பு, அந்தக் காரணம் என்னவென்று அறிய ஆய்வு மேற்கொண்டது. பள்ளிக்குப் போகும் முன் குழந்தைகள் எப்படிச் சிந்திக்கிறார்கள், எப்படிச் செயல்படுகிறார்கள், அவர்களின் கனவு என்ன, பள்ளி மற்றும் பாடம் குறித்து அவர்களின் எண்ண நிலைப்பாடு என்ன, என ஆராய்ச்சி செய்தபோது, குழந்தைகளில் 98 சதவிகிதத்தினர் வெவ்வேறான சிந்தனை கொண்டவர்களாக இருப்பது… Read More