சந்திர கிரகணம்
சூரிய கிரகணம் அமாவாசையின் முடிவிலும் சந்திர கிரகணம் பௌர்ணமி முடிவிலும் தோன்றுவது இயல்பு. இந்த வருடம் ஜனவரி மாதம் 31-ம் தேதி சந்திரகிரகணம் நிகழ இருக்கிறது. 150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் 'பூர்ண சந்திரகிரகணம்' இது. இந்தியாவில் மாலை 5.17 மணிக்கு ஆரம்பித்து, இரவு 8.41 மணிக்கு முடிகிறது. இந்த வருடம் நிலா உதிக்கும் நேரத்திலேயே, முழு சந்திர கிரகணம் தோன்றுவதுதான் இதன் சிறப்பு. அதாவது, கீழ்வானத்தில் நிலா தோன்றும்போதே, கிரகணம் தொடங்கி, இரவு 7.25 மணிவரை முழு சந்திர கிரகணம் நீடிக்கும். அதன்பிறகு, பூமியின் நிழல் படிப்படியாக மறைந்து, 8.41 மணிக்கு நிலா இயல்பு நிலையை அடையும். சந்திர கிரகணம், அப்போது சந்திரனுடைய ஈர்ப்புத் தன்மை மிகவும் குறைவாக இருக்கும். எனவே, அந்த நேரத்தில் நாம் முக்கியமான வேலைகள் எதையும் செய்யக்கூடாது. சந்திர கிரகண நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. இதனால் சந்திரனின் ஒளி, மனித உடலிலும் மனதிலும்… Read More