இந்து மதத்தின் இறை மற்றும் தாவர அறிவும்
இந்து சமயத்தைப் பின்பற்றுவோருக்கு அந்தக் காலத்தில் எல்லாக் கலைகளும் தெரிந்திருந்தன. வானத்தில் உள்ள எல்லா கிரகங்களும் 27 நட்சத்திரங்களும் தெரியும். சாப்பாட்டு அறைக்கு வரும் 10, 15 கீரை வகைகள் தெரியும். துவையலுக்குப் பயன்படும் பல மூலிகைகள் தெரியும். இதெல்லாம் மருத்துவம் உணவு சம்பந்தப்பட்ட தாவரங்கள். இந்து மதத்தில் பயன்படுத்தும் பூக்களின் வகைகள் மட்டும் நூற்றுக் கணக்கில் இருக்கின்றன! இலைகளையும் பூக்களையும் மரங்களையும், மதத்தில் பயன்படுத்தும் கலாசாரம் வேறு எங்கும் இல்லை. தமிழ் இந்துக்களின் வாழ்வு எந்த அளவுக்கு இயற்கையோடு ஒன்றி இருந்தது என்பதற்கு இது ஒரு சான்று. குறிஞ்சிப் பாட்டு என்னும் சங்க இலக்கிய நூலை 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதிய புலவன் கபிலன் 99 பூக்களின் பெயரை ஒரே மூச்சில் பாட்டில் எழுதி சாதனைப் புத்தகத்தில் — தமிழரின் சாதனைப் புத்தகத்தில் — இடம்பெற்றான். துளசி இலை இல்லாத பெருமாள் கோவில் இல்லை; வில்வம் இல்லாத சிவன் கோவில்… Read More