X

Democracy Day

சர்வதேச மக்களாட்சி தினம்

மக்களாட்சி அல்லது சனநாயகம் என்பது "மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் அரசாங்கம்" என வரைவிலக்கணம் கொண்டது. தற்போது உலகில் உள்ள மிகப்பெரும்பாலான நாடுகளில் இந்த முறையே கைகொள்ளப்படுகிறது. பொதுவாக ஒரு நாட்டின் மக்கள், தங்களின் கருத்துக்களைத் தேர்தலின் மூலம் பதிவு செய்து, தங்கள் சார்பாளர்களைத் (சார்பாளிகளைத், பிரதிநிதிளைத்) தேர்ந்தெடுப்பர். தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளிகள் தனிக்கட்சியாகவோ அல்லது மற்ற சார்பாளிகளுடன் சேர்ந்து கூட்டணியாகவோ ஆட்சி செய்வர். மக்களாட்சியின் பண்புகள் ஜனநாயகத்தில் சட்ட சமத்துவம், அரசியல் சுதந்திரம் மற்றும் சட்ட விதிமுறை ஆகியவை முக்கிய அம்சங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.. இந்த நியமங்கள் எல்லா தகுதியுள்ள குடிமக்களுக்கும் சட்டத்திற்கு முன் சமமாக இருப்பதுடன், சட்டப்பூர்வ செயல்முறைகளுக்கு சமமான அணுகலைக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, ஜனநாயகத்தில் ஒவ்வொரு வாக்குக்கும் சமமான எடை உள்ளது தகுதிவாய்ந்த குடிமக்களின் சுதந்திரம் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் சுதந்திரம் ஆகியன பொதுவாக ஒரு அரசியலமைப்பின் மூலம் பாதுகாக்கப்படுகின்றன.. மக்களாட்சியின் கோட்பாடுகள் ஜனநாயகத்திற்கு மூன்று அடிப்படைக் கோட்பாடுகள் தேவைப்படுகிறது:… Read More

We use cookies to make sure you have the best experience when visiting our website, including performance,enhance user experience and security reasons.