ஏன் எடுக்க வேண்டும் சைபர் இன்ஷூரன்ஸ் பாலிசி?
எந்தத் தொழில் நிறுவனமாக இருந்தாலும், பல்வேறு விபத்துகளிலிருந்து காத்துக் கொள்ள பொது இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது அவசியம் என்பது நேற்று வரை இருந்த உண்மை. இன்றைக்கு அந்த இன்ஷூரன்ஸ் பாலிசி மட்டும் எடுத்தால் போதாது; சைபர் இன்ஷூரன்ஸ் என்கிற புதிய இன்ஷூரன்ஸையும் கட்டாயம் எடுத்தே ஆக வேண்டும் என்கிற நிலை உருவாகி உள்ளது.அதென்ன சைபர் இன்ஷூரன்ஸ்..? ஒரு நிறுவனம் சேகரித்து வைத்திருக்கும் டேட்டாக்கள் அழிந்துபோதல் (அல்லது அழிக்கப்படுதல்), அழித்துவிடுவதாக மிரட்டுதல், திருட்டுப்போதல், அபகரித்துக் கொள்ளுதல் (Hacking), சேவை முடக்கப்படும் என்கிற மிரட்டல் ஆகிய இழப்புகளுக்கு காப்புறுதி வழங்குகிறது, இந்த சைபர் இன்ஷூரன்ஸ். இதுகுறித்து விரிவாக விளக்கிச் சொன்னார் பாரத் ரீ இன்ஷூரன்ஸ் புரோக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் டி.எல்.அருணாசலம்.‘‘இந்திய இன்ஷூரன்ஸ் துறைகளில் உள்ள அனைத்து நிறுவனங்களும் இதை வழங்குவதில்லை. குறிப்பிட்ட நான்கு அல்லது ஐந்து நிறுவனங்கள் மட்டுமே இந்தச் சேவையை வழங்குகின்றன. இந்த இன்ஷூரன்ஸானது தனிநபர், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு… Read More