பருத்திப்பால்
வணக்கம் நண்பர்களே!! நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். தாய்ப்பாலிற்கு அடுத்த நிலையில் மாட்டுப் பால் என்ற நிலையில் அதில் மனித உடலுக்குத் தேவைக்கு மிகுதியாக கொழுப்பு இருக்கிறது. அதை மறுசுழற்சி செய்ய வேண்டும். அதைப் பதப்படுத்த வேண்டும் என்றெல்லாம் பல்வேறு நிலைகளில் நம்மைக் குழப்பத்தில் உள்ளாக்கி இருக்கிறது இந்தச் சமூகமும் அறிவியலும். அன்றைய காலச் சூழ்நிலையில் பச்சைப் புல், எண்ணெய் எடுத்த நிலக்கடலை, புண்ணாக்கு போன்றவற்றை மாட்டுக்கு கொடுத்து வந்தனர். அதன்மூலம் நல்ல, அடர்த்தியான பாலையும் கறந்தனர். மாட்டிற்காக தம் நிலத்தில் விளையும் பருத்தியை அறுவடை செய்து பஞ்சு, கொட்டை என தனியாக பிரித்து அந்தக் கொட்டையை ஊற வைத்து ஆட்டிப் பாலெடுத்து மாட்டடுக்குக் கொடுத்தனர். அவ்வாறாக செய்யும்போது மாடு நன்றாக பால் கறக்கும். இதை ”பருத்திப் பால் உண்ட பசு… Read More