கனவாகி வரும் கண்ணாமூச்சி விளையாட்டு
ஓடி ஆடி தெருக்களில் குழுவாக விளையாடியதை இனி கதைகளில் மட்டுமே படிக்க வேண்டும் போல ஏனென்றால் இன்றைய தலைமுறையினருக்கு விளையாட்டு என்றாலே அது கிரிக்கெட்தான் நினைவுக்கு வருகிறது. அந்த அளவிற்கு கிரிக்கெட்டின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. மறந்து கொண்டிருக்கும் கிராமத்து விளையாட்டுக்களை நினைவு படுத்தவே இந்த கட்டுரை. கிராமத்து விளையாட்டுக்கள் விளையாட்டுக்கள் வீட்டினுள் விளையாடுவது ஒரு வகை. வீட்டிற்கு வெளியே சென்று ஆடுவது மற்றொன்று. ஆடுபுலி ஆட்டம், கபடி, சல்லிக் கட்டு, உறியடி, வழுக்கு மரம், சிலம்பாட்டம், வண்டிப் பந்தயம். கால்தூக்கிக் கணக்குப் பிள்ளை, பந்து, பச்சைக் குதிரை, பம்பரம், புளியங் கொட்டை, கபடி, கள்ளன் போலீஸ் இவை சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டு பல்லாங்குழி, தாயம், சில்லுக் கோடு, தட்டா மாலை, கும்மி, கோலாட்டம், பாண்டி, கண்ணா மூச்சி, பூசணிக்காய், குலைகுலையா முந்திரிக்காய், எலியும் பூனையும், ஒரு குடம் தண்ணி ஊத்தி, பூப்பறிக்க வருகிறோம், கரகர வண்டி, சில்லுக் கோடு, பூப்பறிக்க… Read More