ஆவணி-13
வணக்கம் இன்று ஸ்ரீ விளம்பி வருடம் ஆவணி மாதம் 13ம் நாள் புதன்கிழமை. திருக்குறள்: அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல. ஆன்மீக தகவல்: ராமாயணத்தை இந்தியில் "ராமசரிதமானஸ்' துளசிதாசர் எழுதியுள்ளார். அதில் பாலகாண்டத்தில் வரும், "பந்தௌ நாம ராம் ரகுபர் கோ! ஹேது க்ருஸானு பானு ஹிமகர் கோ!! பிதி ஹரி ஹர்மய பேத் ப்ரான் ஸோ! அகுண அனூபம் குண நிதான் ஸோ!! " என்ற ஸ்லோகம் இந்த தடங்கலை சீர்செய்யும். இதைச் சொல்ல முடியாதவர்கள் பொருளைச் சொல்லலாம். ""ரகுநாதா! உன் நாமத்தை வணங்குகிறேன். அக்னி, சூரியன், சந்திரன் எல்லாமே அந்நாமத்தில் அடங்கி உள்ளன. ராமநாமத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்தியின் அம்சங்களும் உள்ளன. வேதத்தின் உயிர்நாடியும், நிர்குணமானவனும், நற்குணங்களின் இருப்பிடமாகவும் இருக்கும் ராமநாமத்தை போற்றுகின்றேன்'' இந்த ஸ்லோகத்தைச் சொல்ல எவ்வித விரதமும் இருக்க வேண்டியதில்லை. நேரம் காலமும் இல்லை. தினம் 3 முறை… Read More