Bio-Gas (உயிரி வாயு) பேருந்து
ஜெட் வேகத்தில் ஏறிக்கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் விலையின் காரணமாக டிக்கெட் விலை விண்ணைத் தொட்டுவிடும் அளவுக்கு உயர்ந்துவருகிறது. ஆனால், இதுகுறித்து இனி கவலைப்படவே தேவையில்லை. மாட்டு சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை எரிவாயுவில் இயங்கும் பேருந்தை இந்தியாவிலேயே முதல் முறையாக தயாரித்து சாதனை படைத்துள்ளனர். மேற்குவங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவைச் சேர்ந்த ‘போனிக்ஸ் இந்தியா ஆய்வு மற்றும் மேம்பாட்டு' நிறுவனம் மாட்டு சானத்தின் மூலம் தயாரிக்கப்படும் ‘பயோ-கியாஸ்' எனப்படும் இயற்கை எரிவாயுவை கொண்டு இயங்கும் பேருந்தை தயாரித்துள்ளது. சோதனை அளவில் இருந்த இந்தப் பேருந்து தற்போது பயணிகளின் பயன்பாட்டுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளதால், இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் இந்த பேருந்தை, 17 கி.மீ-க்கு இயக்க வெறும் ஒரு ரூபாய் மட்டுமே செலவாகும் என்பது ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கூட்டிச்செல்கிறது. மற்ற எந்த வாகனங்களைக் காட்டிலும் இந்தியாவிலேயே அதிக… Read More