பூமாதேவி ஸ்லோகம்
முன்பெல்லாம் பலரது வீடுகளில், காலை எழுந்தவுடன் ‘ப்ராதஸ்மரனம்’ என்ற சுலோகத்தை பெரியவர்கள் தினமும் காலையில் சொல்லும் வழக்கம் இருந்து வந்தது. அந்த சுலோகமானது.. ‘ஸமுத்ர வசனே தேவி பர்வத ஸ்தன மண்டலே விஷ்ணு பத்னி நமஸ்துப்யம் பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே..’ -என்பதாகும். அதாவது, ‘பெரும் நீர்ப்பரப்பான கடலை தனது ஆடையாக உடுத்திய நிலமகளே, எனது கால் பாதங்களை உன் மீது வைத்து எழுந்திருப்பதை பொறுத்தருள வேண்டும்’ என்று பெரியவர்கள் சொல்லியபடி படுக்கையில் இருந்து எழுவார்கள். Read More