ஆடி அமாவாசை
வணக்கம். நமது அறிவியல் மற்றும் ஆதி கால மனிதனின் கூற்றுபடி பூமியை சந்திரன் வலம்-சுற்றி வருவதும் பூமியும் சந்திரனும் இணைந்து சூரியனை வலமாக சுற்றி வருவதும்; பூமி தன்னைதானே சுற்றுவதால் பூமியில் இரவு, பகல் ஏற்படுகின்றன எனவும்; பூமி தனது அச்சில் 23 ½ பாகை சரிவாகச் சுற்றுவதனால் பருவகாலங்கள் உண்டாகின்றன என்றும் நாம் அறிந்ததே. பூமி மற்றும் சந்திரன் பற்றிய சில அறிவியல் குறிப்பு சந்திரன் பூமியைச் சுற்றுவதால், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் 29.53 நாட்களுக்கு ஒரு முறை ஒரே நேர்கோட்டில் சந்திக்கிறது. இதனால் நம்மால் சந்திரனை காண முடியவில்லை. அப்படி சந்திக்கும் நேரத்தில் சந்திரன், பூமிக்கு ஒருபக்கத்திலும், சூரியன் மறுபக்கத்திலுமாக, அமையும் போது பூமியை நோக்கி இருக்கும் சந்திரனின் பகுதியில் சூரியக் கதிர்கள் பட்டு ஒளிர்கின்றது. இதுவே பௌர்ணமி; மாற்று கூற்றில் அமாவாசை. சூரியனைப் “பிதுர் காரகன்” என்றும், சந்திரனை “மாதுர் காரகன்” என்றும் சோதிடம் கூறுகின்றது.… Read More