இன்று ஆடி 18
வணக்கம் அன்பர்களே. இன்று ஆடி மாதம் 18ம் நாள். தமிழ் மாதங்களில் நான்காவதாக வருவது ஆடிமாதம் ஆகும். தமிழ் மாதத்தில் ஆடி18 அல்லது ஆடி பெருக்கு மிகவும் முக்கிய நாளாகும். பஞ்ச பூதங்களில் நீர் வளத்தை எப்போதும் நமக்கு பஞ்சம் இல்லாமல் தரவேண்டும் என இயற்கை அன்னையை வழிபடும் தினமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஜோதிடத்தில் இந்த மாதம் கடக ராசி. இது சந்திர பகவானுக்குரிய ராசியாகும். சந்திரன் நீர் மற்றும் விவசாயம் போன்றவற்றிற்கு காரகனாகிறார். 'ஆடி பட்டம் தேடி விதை' என்ற பழமொழியும் தமிழர்களின் வழக்கத்தில் ஒன்று. நாம் அனைவரும் நீர் வளங்களுக்கு நன்றி சொல்வோம். இன்று தமிழகத்தின் புண்ணிய நதியான காவிரியில் பெண்கள் அம்மனை வழிபட்டு சித்திர அன்னம் படைத்தது சுமங்கலிகள் புது தாலி கயிறு மாற்றி வழிபடுவார்கள். மேலும் ஆடி பெருக்கு பற்றி அறிய இங்கு சுட்டவும் Read More