வணக்கம். இன்று அமாவாசை, ஆடி அமாவாசை என்பது ஒரு சிறப்பு என்றால், அதிலும் மற்றொரு சிறப்பு ஆடி அமாவாசை குறிப்பாக திருவாதிரை, புனர்பூசம், பூசம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் சேர்ந்து வருகின்றது. இன்று கொடுக்கப்படும் தர்ப்பணம், 12 ஆண்டுகள் தர்ப்பணம் செய்த பலனை கொடுக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அமாவாசை தினத்தன்று கட்டாயமாக முன்னோர்களுக்கு கொடுக்க வேண்டிய திதி தர்ப்பணத்தை தவறாமல் கொடுத்து விடவேண்டும். இன்று அமாவாசை தினத்தன்று உங்களுடைய முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வது கோடான கோடி புண்ணியத்தை நம்முடைய குடும்பத்திற்கு சேர்க்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. இன்றைய அமாவாசை வழிபாட்டை யாரும் தவறவிடாதீர்கள். அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு செய்யும் கடமைகளை நாம் மறந்தால், முன்னோர்கள் நம்மை மறந்துவிடுவார்கள். வாழ்க வளமுடன் நலமுடன் ? Read More