இன்று-15.10.2019
வணக்கம். இன்று விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் 28ம் நாள் செவ்வாய் கிழமை துவிதியை திதி. A.P.J. அப்துல்கலாம் பிறந்தநாள். சிறிய கதை எனக்கு படித்ததில் பிடித்து. அவன் ஒரு பெரிய நாட்டின் மன்னன். ஒரு நாள் இரவு மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது. காதில் இருந்த பூச்சியை எடுக்க மன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள். அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை. மன்னனின் பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் அறிவிக்கப்பட்டன. எங்கிருந்தெல்லாமோ வைத்தியர்கள் வந்தார்கள். யாராலும் அந்தப் பூச்சியை வெளியே எடுக்க முடியவில்லை. மன்னனால் தூங்க முடியவில்லை. உணவும் குறைந்து விட்டது. மன்னன் பொலிவு இழந்தான். இந்த நேரத்தில் இமயமலையிலிருந்து ஒரு துறவி வந்து சேர்ந்தார. மன்னனின் காதை நன்றாகப் பரிசோதித்தார். "இது மிகவும் அபூர்வ வகை பூச்சி, நம் பக்கத்து மூலிகைகளுக்கு இது கட்டுப்படாது. இங்கிருந்து நூறு யோஜனை தூரத்தில் உள்ள ஒரு காட்டில் விளையும்… Read More