சூரிய கிரகணம் -26.12.2019
காலை நிகழும் சூரிய கிரகணத்தை பார்ப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சூரிய கிரண ஒளி கண்களில் உள்ள விழித்திரையை பாதிக்கக்கூடும் என்பதால் வெறும் கண்களால் சூரியனை பார்க்கக்கூடாது என்பதை விஞ்ஞானம் ஒப்புக் கொள்கிறது. சூரிய கிரகணத்தை சோலார் கண்ணாடி மூலமாக பார்ப்பது பாதுகாப்பானது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தமிழக நேரப்படி காலை 8 மணி தொடங்கும் சூரிய கிரகணம் முற்பகல் 11.30 மணி வரை நீடிக்கிறது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மேகமூட்டம் இல்லையென்றால் சூரிய கிரகணத்தை முழுவதுமாக பார்க்க முடியும். பரந்து விரிந்திருக்கும் வானில் அவ்வப்போது பல அற்புதங்கள் தோன்றிக் கொண்டே தான் உள்ளன. அது போன்று ஒரு ஆச்சரியமே நாளை நிகழும் சூரிய கிரகணம்...சூரியன் -நிலவு- பூமி ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும்போது சூரிய கிரகணம் தோன்றுகிறது. அதாவது சூரியனை நிலவு நேர்கோட்டில் மறைப்பதை சூரிய… Read More